Search This Blog

Wednesday, 11 July 2012

பெருமானாரின் இறுதி பேருரை




1417 ஆண்டுகளுக்கு முன் …. ஹிஜ்ரி பத்தாம்ஆண்டு….பெருமானார்(ஸல்அவர்கள் அரபாத் பெருவெளியில் உரைநிகழ்த்தினார்கள்:-

அதில் பத்து விசயங்களை தமது அன்புக் கட்டளைகளாக உலகின் முன்வைத்தார்கள்.

1.( 
மக்களே! ) நன்றாகக் கவனத்துடன் கேட்டுக்கொள்ளுங்கள்.ஏனெனில்அடுத்த வருடம் இதே நாளில் இதே இடத்தில் உங்கள்மத்தியில் நான் இருப்பேனாவென்பது எனக்குத் தெரியாது.இந்த நாளும்இந்த மாதமும்இந்த நகரமும் பரிசுத்தமானவை.அதுபோலவே உங்களது உயிரும்உடைமையும்,கண்ணியமும்பரிசுத்தமானவையாகும். (இறுதிநாள்வரை அவை பரிசுத்தமாகஇருக்க வேண்டும்யாரும் அவற்றில் தலையிடவோ,அபகரிக்கவோ கூடாது.)இறைவனின் சமூகத்திலேஇவற்றிற்கெல்லாம் நீங்கள் கணக்களிக்க வேண்டியதிருக்கும் என்பதைநினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

2.( 
மக்களே! ) ஒருவர் குற்றம் செய்தால் அக்குற்றத்தின் தண்டனைஅவரது குடும்பமத்தினருக்கல்ல..,அவருக்கே வழங்கப்படும்தந்தைதன் பிள்ளைக்கோ,பிள்ளை தன் தந்தைக்கோ அநியாம்செய்யவேண்டாம்தந்தையின் குற்றத்திற்காகபிள்ளையையோ,பிள்ளையின் குற்றத்திற்காகத் தந்தையையோதண்டிக்கப்படமாட்டாது.

3.( 
மக்களே! ) அஞ்ஞான காலத்தில் (இஸ்லாத்திற்கு முன்புஏற்பட்ட)கொலைகளுக்கும்கொடுஞ்செயல்களுக்கும்,பழிவாங்கும் உரிமை இன்று முதல் ரத்து செய்யப்பட்டுவிட்டது.முதலாவது எனது குடும்பத்தைச்சார்ந்த ரபீஆ இப்னுல் ஹாரிதின்கொலைக்கு பழிவாங்குவதை நான் மனப்பூர்வமாக நிறுத்திவிட்டேன்.(அறியாமைக்காலத்தில் நிலவிய பழிக்குப்பழியும் உயிர்போக்கும்மடமையும் இனி கூடாது.)

4.( 
மக்களே! ) வட்டி வாங்குதல் இனி உங்களுக்குத் தடுக்கப்படுகிறது.அஞ்ஞான காலத்தில் ஏற்பட்ட வட்டித் தொகையனைத்தும் இன்றுமுதல் ரத்து செய்யப்படுகின்றன(கடன்பட்டவர்கள் முதலை மட்டும்திருப்பிக் கொடுத்துவிட்டால் போதுமானது.)முதலாவது எனதுபெரிய தந்தையார் அப்பாஸ் இப்னு அப்துல் முத்தலிப் அவர்களுக்குவரவேண்டிய வட்டித் தொகையனைத்தும் தள்ளுபடி செய்துவிட்டேன்.

5..
மக்களேபெண்கள் குறித்து அல்லாஹ்வை அஞ்சிக்கொகொள்ளுங்கள்உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைஉள்;ளது போல்உங்கள் மீதும் உங்கள் மனைவியர் மீதுஉரிமையுண்டு). அவர்கள் உங்கள் கைகளிலே ஒப்படைக்கப்பட்ட(அமானிதம்அடைக்கலப் பொருள்களாவர். அல்லாஹ்வின்பெயரால் அவர்களை உங்கள் மனைவியராகப்பொறுப்பேற்றிருக்கிறீர்கள்அவர்களின் கடமைநீங்கள்விரும்பாதவர்களை உங்கள் இல்லத்திற்குள் அனுமதிக்கலாகாது.மீறினால் படுக்கையை விட்டு சிறிது காலம் விலக்கிவைக்கவோ,காயம்ஏற்படாதவாறு அடிக்கவோ செய்யுங்;கள். (அதுபோலஉங்களது கடமைநீங்கள் அவர்களுக்கு வேண்டிய உணவு,உடைகளை வழங்கி(அன்புடனும் கருணையுடனும் நடந்து கொள்ளுங்கள்இறைவனுக்குப்பயந்து அவர்களதுநன்மைகளைப் பேணி வாருங்கள்.

6.
மக்களேஎனது வார்த்தைகளை கவனத்துடன் கேளுங்கள்கேட்டுநன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்எல்லா முஸ்லிம்களும்ஒருவருக்கொருவர் சகோதரரே என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்ஒரே சகோதரத்துவத்தைச் சேர்ந்தவர்கள் நீங்கள!ஒருவருடைய பொருளை அவர் மனப்பூர்வமாகக் கொடுத்தாலன்றி,மற்றவர் எடுப்பது (ஹராம்தடுக்கப்படுகிறதுஅநியாயம்செய்வதிலிருந்து கவனத்துடன் விலகிக் கொள்ளுங்கள்.உங்களிடம் இரு பெரும் பொக்கிஷங்களை வி;டுச்செல்கிறேன்.அவைகளை பின்பற்றும் வரையில் வழி தவறமாட்டீர்கள்.
முதலாவது இறைவனின் திருவேதமான திருக்குர்ஆன்!

இரண்டாவது இறைவனது தூதரான எனது வாழ்கை நெறிகள்(ஸுன்னத்)!

7.
மக்களேஎனக்குப்பிறகு எந்த ஒரு இறைதூதரும் (நபியும்இல்லை.உங்களுக்குப்பின் எந்த ஒரு சமுதாயமும் வரப்போவதில்லைதெரிந்துகொள்ளுங்கள்உங்களைப்படைத்துக் காக்கும் உங்கள் இறைவனையேவணங்குங்கள்உங்களுக்குக் கடமையாக்கப்பட்ட ஐவேளைத்தொழுகைகளை சரிவர நிறைவேற்றி வாருங்கள்.
ரமளான் (என்னும் புனிதமாதத்தில் நோன்பு நோற்று வாருங்கள்.உங்கள் செல்வத்துக்குரிய ஸகாத்தை (கணக்கிட்டுஉங்ளைப் பரிசுத்தப்படுத்துவதற்காக வழங்கி வாருங்கள்உங்கள் இறைவனின்இல்லத்திற்குச் சென்று ஹஜ்ஜுக் கடமையையை நிறைவேற்றிவாருங்கள்உங்களை ஆளும் தலைவர்களுக்குக் கட்டுப்படுங்கள்.இவற்றால் நீங்கள் உங்களுக்காகச் சித்தப்படுத்தப்பட்டுள்ளசுவனத்திற:குச் செல்வீர்கள்
.

8.
மக்களேஉங்கள் இறைவனை மிக விரைவில் நீங்கள் சந்திப்பீர்கள்.அவன் உங்கள் செயல்கள் அனைத்தையும் பற்றி விசாரணை செய்வான்.எனக்குப்பிறகு நீங்கள் உங்ளுக்கிடையே கொலைக் குற்றம் புரிந்துவழிகேடர்களாக மாறிவிடவேண்டாம்அறிந்து கொள்ளுங்கள்!நிச்சயமாக சைத்தான் உங்களின் இந்த பூமியில் அவனைவணங்குவதைக் குறித்து (ஏமாற்றமடைந்துமுற்றிலும்நிராசையடைந்து விட்டான்ஆயினும் நீங்கள் மிக இலேசாகக் கருதும்செயல்களில் அல்லாஹ்வுக்கு மாறு செய்யவைத்து சைத்தானுக்கு(உடன்பட்டுதலைவணங்குவீர்கள்அதன் மூலம் அவன்மகிழ்சியடைவான்எந்தவகையிலும் சைத்தானியச் செயல்களுக்குஇசைந்துவிடாதீhகள்)

9.
மக்களேஅறிந்து கொள்ளுங்கள!. உங்கள் இறைவன் ஒருவனே!உங்கள் தந்தையும் ஒருவரே!
இறையச்சம் கொண்டோரைத்தவிர, 'அரபிகள் அஜமி(அரபியல்லாதார்)களை விட உயர்ந்தோருமல்லஅதுபோல்அஜமிகள் அரபிகளைவிட உயர்ந்தோருமல்ல.. வெள்ளைநிறத்தவர் கறுப்பு நிறத்தவரை விடவோகறுப்பு நிறத்தவர்வெள்ளை நிறத்தை விடவோ சிறந்தோருமல்லஅனைவரும்ஆதமுடைய மக்களே! அந்த ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவரே. (ஜாதித்திமிர்நிறத்திமிர்,குலத்திமிர் அனைத்தையும் இதோ எனதுகாலின் போட்டு மிதிக்கிறேன்..) சொற்பொழிவை முடித்த வள்ளல்பெருமானார்(ஸல்வெள்ளம்போல் திரண்டிருந்த கூட்டத்தினரைநோக்கிக் கேட்டனர்
.

10. ( 
மக்களே! ) இறைவனது கட்டளைகளை நான் உங்களுக்கு அறிவித்துவிட்டேனாஇறைவன் எனக்களித்த தூதை நிறை வேற்றிவிட்டேனா?என என்னைப்பற்றி உங்களிடம் விசாரிக்கும் போது), இறுதித் தீர்ப்புநாளில் என்ன பதில் கூறுவீர்கள்?

'
நிச்சயமாக (இறைவனது கட்டளைகளைஎங்களுக்கு)அறிவித்துவிட்டீர்கள்இறைவன் தங்களுக்கு வழங்கிய தூதுவத்தை(நபித்துவத்தைமுழுமையாக நிறைவேற்றிவிட்டீர்கள்! எங்கள்வாழ்வுக்குத் தேவையான அனைத்து அறிவுரைகளையும்வழங்கிவிட்டீர்கள்என்றும் சாட்சியம் கூறுவோம்.!'
அந்த மாபெரும் மனிதக்கடலிலிருந்து ஒருமுகமாக வான்முட்டஎழுந்தது இந்தப் பேரொலி.
இதைக்கேட்ட இறுதித்தூதர் (ஸல்அவர்கள் வானத்தை நோக்கிதங்களது திருக்கரங்களை உயர்த்தி,' அல்லாஹும்மஷ்ஹது!அல்லாஹும்மஷ்ஹது!! அல்லாஹும்மஷ்ஹது!!!
இறைவா!நீயேஇதற்கு சாட்சிஇறiவா!நீயே இதற்கு சாட்சி!
இறைவாநீயே இதற்கு சாட்சிஎன்று மும்முறை முழங்கினார்கள்.
மேலும் இங்கு வந்திருப்பவர்கள்வராதவர்களுக்கும் என்னுடையஇந்தச் செய்திகளைத் தெரிவித்துவிடுங்கள்ஏனெனில் நேரில்கேட்போரைவிட கேள்விப்படுவோரில் சிலர் நன்குவிளக்கமுடையோராக இருப்பர்.

(
ஆதார நூற்கள்புகாரிமுஸ்லிம்அபூதாவூதுதிர்மிதிமுஸ்னதுஅஹ்மதுஇப்னு ஜரீர்இப்னுஹிஷhம்)

No comments:

Post a Comment