Search This Blog

Sunday 4 September 2011

புலூகுல் மராம் – நபிமொழி தொகுப்பு


அத்தியாயம் – 7
வியாபாரம் பற்றிய நூல் - வியாபாரத்தின் நிபந்தனைகளும், அதில் தடை செய்யப்பட்டவையும் பற்றிய பாடம்

ஹதீஸ் : 800
“எவ்வகை நம்பாத்திஹ்யம் மிகத் தூய்மையானது?” என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, “மனிதன் தன் கையினால் உழைத்துச் சம்பாதிக்கும் சம்பாத்தியமும், ஏமாற்றமில்லாமல்(நியாயமாகச்) செய்யும் வியாபார(த்தின் மூலம் கிடைக்கும் லாப)மும்”என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: ரிஃபாஆ இப்னு ராஃபிஃ(ரலி)
நூல்கள்: பஸ்ஸார்


(ஹதீஸ் தரம்: ஹாகிம் இதை ஸஹீஹ் என்று குறிப்பிடுகின்றார்)
ஹதீஸ் : 802
“மதுபானம், தானாக இறந்தவை, பன்றி மற்றும் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதை இறவன் தடுத்துவிட்டான்” என நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் மக்காவில் இருக்கும் போது கூறினார்கள். அப்போது, “அல்லாஹ்வின் தூதர் அவர்களே! தாமாக இறந்தவையின் கொழுப்பைப் பற்றி கூறுங்கள், ஏனெனில், அதை கொண்டு படகுகளை வழவழப்பாககவும், தோல்களை பதப்படுத்தவும் செய்கிறார்கள். இன்னும் மக்கள் அதன் மூலம் விளக்கும் எரிக்கின்றனர்” என்று கேட்கப்பட்டது.அதற்கு, “கூடாது அதுவும் ஹாராமாகும்” என்று கூறிவிட்டு, “யூதர்களை அல்லாஹ் நாசமாக்கட்டும்! அல்லாஹ் அவர்களுக்கு(தானாக இறந்த) அதன் கொழுப்புகளைத தடை செய்தபோது, அவர்கள் அதை உருக்கி விற்றார்கள், அதன் கிரயத்தை உண்டார்கள்… என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: ஜாபி இப்னு அப்தில்லாஹ்(ரலி)
நூல்கள்: புஹாரி, முஸ்லிம் 


ஹதீஸ் : 803
“விற்பனை செய்பவர் மற்றும் வாங்குபவருக்கிடையில் பிரட்சினைகள் ஏற்பட்டு, அதற்கான எந்த வித ஆதாரமும் இருவரிடமும் இல்லை என்றால், பொருளுக்குரியவருடைய பேச்சே ஏற்றுக் கொள்ளத்தக்கதாகும், அல்லது அந்த பொருளை விற்றுவிட வேண்டும்”என்றும் நபி(ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத்(ரலி)
நூல்கள்: அஹ்மத், அபூதாவூத், நஸயி, இப்னுமாஜா, திர்மிதி
(ஹதீஸ் தரம்: ஹாகிம் இதை ஸ்ஹீஹ் என்று கூறுகிறார்)
ஹதீஸ் : 804
நாயின் கிரயத்தையும், விபசாரியின் சம்பாத்தியத்தையும், குறிகாரனின் தட்சனையையும் நபி(ஸல்) அவர்கள் தடைசெய்துள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்வூத் அல் அன்ஸாரி(ரலி)
நூல்கள்: புஹாரி, முஸ்லிம்


ஹதீஸ் : 805
“நான் ஒட்டகத்தில் அமர்ந்து இருந்தேன். ஒட்டகம் களைத்து விட்டது. நான் அதை விட்டுவிட விரும்பினேன்”. அதே நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் என்னை வந்தடைந்தார்கள். பின்னர் எனக்காகப் பிரார்த்திவிட்டு ஒட்டகத்தை அடித்தார்கள். உடனே அது இதற்கு முன்னர் செல்லாத அளவு(வேகமாக) செல்ல ஆரம்பித்தது. அப்போது நபி(ஸல்) அவர்கள் “அதை என்னிடம் ஒரு ஊக்கியாவிற்கு விற்றுவிடு” என்று என்று கூறினார்கள். நான்”இல்லை” என்று சொன்னேன். பின்னரும் அவர்கள், “என்னிடம் விற்று விடு” என்று கூறினார்கள். “இதில் நான் என்னுடைய குடும்பத்தினரிடம் போய்சேரும் வரை சவாரி செய்வேன்” என்று நிபந்தனை இட்டு நான் அதை ஒரு ஊக்கியாவிற்கு விற்றுவிட்டேன். நான் வீடு சென்றதும் ஒட்டகத்தை நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றேன். அவர்கள் அந்த கிரயத்தை என்னிடம் கொடுத்துவிட்டார்கள்.நான்(அதை பெற்றுக்கொண்டு) திரும்பினேன்.அப்போது எனக்கு பின்னால் ஆள் அனுப்பினார்கள். இன்னும், “உன்னுடைய ஒட்டகத்தை எடுத்து கொள்ள நான் குறைந்த விலை கொடுத்துவிட்டேன் என எண்ணுகிறாயா? உன்னுடைய ஒட்டகத்தையும் ,திர்ஹம்களையும் வாங்கிக் கொள். அது உனக்கே உரியது” என்று கூறினார்கள்.
அறிவிப்பவ: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி)
நூல்கள்: புஹாரி, முஸ்லிம்


ஹதீஸ் : 806
“எங்களி ஒருவர் தன்னுடய அடிமையிடம், “என்னுடைய மரணத்திற்கு பின்னர் விடுதலை பெற்றுக் கொள்” என்று கூறி இருந்தார்.(ஆனால், அவர் கடன் பட்டு இருந்தார். எனவே) நபி(ஸல்) அவர்கள் அந்த அடிமையை அழைத்து வரச்செய்து அவனை விற்பனை செய்து விட்டார்கள்.”
அறிவிப்பவ: ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி)
நூல்கள்: புஹாரி, முஸ்லிம்


ஹதீஸ் : 807
(உறைந்த கட்டியான)நெய்யில் எலி விழுந்து விட்டது. அதைப் பற்றி நபி(ஸல்) வர்களிடம் கேட்கப்பட்டது.(அதற்கு) நபி(ஸல்)அவர்கள், “அதையும், அதை சுற்றியுள்ள நெய்யையும் (வெளியில்) எடுத்து எறிந்து விட்டு மீதியுள்ள நெய்யை சாப்பிடுங்கள்”
என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: நபி(ஸல்) அவர்கள் துணைவியார் மைமூனா(ரலி)
நூல்கள்: புஹாரி
(ஹதீஸ் தரம்: அஹ்மத் மற்றும் நஸயீயில் “உறைந்த நெய்யில்” எனும் வாசகம் இடம் பெற்றுள்ளது)
ஹதீஸ் : 808
“நெய்யில் எலி விழுந்து விட்டால், அது உறைந்ததாக இருந்தால் அதையும், அதை சுற்றியுள்ளதையும்(எடுத்து) எறிந்துவிடுங்கள்.(மீதத்தப் பயன்படுத்தி கொள்ளுங்கள்) அது உறையாததாக இருப்பின் அதை நெருங்காதீர்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூஹூரைரா(ரலி)
நூல்கள்: அஹ்மத், தாவூத்.


(ஹதீஸ் தரம்: இமாம் புஹாரி(ரஹ்) அவர்கள், இதை மைமூனா(ரலி) அவர்களின் அறிவுப்பு என்பதில் உறுதியாக உள்ளார். அபூஹாதம்(ரஹ்) அவர்கள், இது மைமூனா(ரலி) கூறியதா அல்லது அபூஹூரைரா கூறியதா என்பதில் சந்தேகத்தில் உள்ளார்)
ஹதீஸ் : 809
பூனை மற்றும் நாயின் கிரயத்தை பற்றி நான் ஜாபிர்(ரலி) அவர்களிடம் கேட்டதற்கு அதைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்” என, அபூ ஜாபிர்(ரலி) அறிவிக்கின்றார்கள்
நூல்கள்: முஸ்லிம், நஸயீ


(ஹதீஸ் தரம்: “வேட்டை நாயை தவிர” என்பது நஸயீயில் அதிகப்படியாக உள்ளது)
ஹதீஸ் : 810
பரீரா என்னிடம் வந்து, “நான் என்னுடைய எஜமானனிடம் ஒன்பது ஊக்கியாவின் பேரில் விடுதலை பத்திரம் எழுதிக்கொடுத்துவிட்டேன். வருடம் ஒன்றுக்கு ஒரு ஊகியா வ்தம் நான் செலுத்த வேண்டும், எனக்கு உதவி செய்யுங்கள்” என்று கூறினார். “உன்னுடைய எஜமானன் விரும்பினால், ஒன்பது ஊக்கியாவையும் ஒட்டு மொத்தமாக நான் செலுத்தி விடுகிறேன். ஆனால், உன்னுடைய’வலா”(வாரிசு உரிமை) எனக்குறியதாக இருக்க வேண்டும்.(அப்படியானால்) நான் (விடுதலை) செய்கிறேன்” என்று நான் கூறினேன். பரீரா தன்னுடைய எஜமானர்களிடம் சென்று இதை கூறினார். அவர்கள் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள். அவர்களிடமிருந்து(பரீரா) என்னிடம்(மீண்டும்)வந்தார். அப்பொது நபி(ஸல்) அவர்கள் அவர்களும் அமர்ந்து இருந்தார்கள்.அவர்(பரீரா), “இதை நான் அவர்களிடம் கூறியதற்கு அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.”வலா” அவர்களுக்கெ உரியது என்று கூறுகின்றனர்” என கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அதை கேட்டுவிட்டார்கள். ஆயிஷா(ரலி) அவர்களும் நபி(ஸல்) அவர்களிடம் செய்தியை கூறினார்கள். அதற்கு நபி(ஸல்)அவர்கள்”அவரை பெற்றுக் கொண்டு, “வலா” உனக்கே உரியது என்று நிபந்தனை இடு. ஏனெனில், எவர் அடிமையை விடுதலை செய்கிறாரோ, அவருக்கெ “வாரிசுரிமை” உரியதாகும் என்று, கூறினார்கள். ஆயிஷா(ரலி) அவ்வாறே செய்தார்கள். பின்னர் நபி(ஸல்) அவர்கள் மக்களுக்கு உரை நிகழ்த்த எழுந்தார்கள். அல்லாஹ்வை புகழ்துவிட்டு, “மக்களுக்கு என்ன என்னவாகிவிட்டதோ? அவர்கள் அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாதவற்றை யெல்லாம் நிபந்தனைகளாக முன் வைக்கின்றனர். அல்லாஹ்வின் சட்டத்தில் இல்லாதவைகள் செல்லாதவையே! அவை நூறு நிபந்தனைகளாக இருப்பினும் சரியே! அல்லாஹ்வின் தீர்ப்புதான் ஏற்கத் தகுந்ததாகும்.இன்னும்,அல்லாஹ்வின் நிபந்தனைதான் உறுதியானதாகும். இன்னும், “வாரிசுரிமை”(அடிமைகளை) விடுதலை செய்பவருக்கே உரியது” என்று கூறினார்கள்
 நூல்கள்: புஹாரி, முஸ்லிம்

No comments:

Post a Comment