Search This Blog

Monday, 5 September 2011

வரதட்சனை வாங்கியவர்களிடம் கணக்கு தீர்க்காமல் அல்லாஹ் விடப்போவது கிடையாது


தயவு செய்து சிரமம் பாராமல் படியுங்கள்.

வரதட்சனை என்ற கொடுமையான சமூக தீமையை இந்த முஸ்லிம் சமுதாயம் விட்டொழிக்காதவரை இத்தகைய நிகழ்சிகள் கண்டிப்பாக அரங்கேறும். அல்லாஹ் நீங்கள் பெண்களுக்கு மஹர் கொடுத்து திருமணம் செய்யுங்கள் என்று கூறும் பொழுதுமானங்கெட்ட நம் முஸ்லிம் இளைஞர்கள் பெண்களிடம் வரதட்சனை வாங்கி திருமணம் செய்கின்றனர்ஒட்டுமொத்த சமூகமும் ஒளிவு மறைவின்றி செய்யும் இந்த மாபாதக செயலால்  வரதட்சனை கொடுக்க வசதியில்லாத பெண்கள் தவறான வழிக்கு செல்ல நிர்பந்தப்படுத்தப்படுகிறார்கள். அல்லாஹ்வின் கட்டளைகளை இந்த சமுதாயம் மீறும்போது அதற்குண்டான தீய விளைவுகளையும் சந்தித்தே தீரும்.
வரதட்சணை கொடுமை திருமணத்துடன் முடிவதில்லை-
மகளை திருமணம் முடித்த மருமகனுக்கு வேலையோ தொழிலோ இல்லை என்றால் அவனுக்கு வேலை வாங்கி தர வேண்டும் அல்லது தொழில் செய்ய முதலீடு தர வேண்டும். அல்லது வெளிநாடு செல்ல விஷா எடுத்து கொடுத்து ஃபிலைட் டிக்கட் எடுத்து கொடுத்து, அவன் பொருளீட்ட இப்படியான கொடுமைகளை பெண்ணை பெற்றோர் அனுபவிக்க வேண்டும்.
   இவன் மனைவியிடம் சுகம் அனுபவிப்பானாம் அதன் காரணமாக கருவை (வாரிசுகளை) மனைவி சுமக்க ஆரம்பித்து விட்டால் அவளுடைய மருத்துவ செலவு முதல் பிரசவ செலவு வரை – அவனுடைய மனைவியை பெற்றவர்கள் செய்ய வேண்டுமாம், இந்த மாதிரியான இழிவான ஆண் பிறவிகளுக்கு எதற்கு வாரிசுகள்?. இந்த மாதிரியான கேடுகெட்டவர்களின் வாரிசுகளை மனைவியானவள் கருவிலேயே அழித்து விட வேண்டும். அதன் மூலம் தம் பெற்றோரின் சுமையை அவளால் குறைக்க முடியும். அதிலும் பெண்குழந்தை பிறந்து விட்டால் அந்த பிறந்த பெண் குழந்தைக்கு இவ்வளவு நகை போட்டால்தான் தன் மனைவியையும் குழந்தையையும் அழைத்து போவானாம். என்பது கொடுமையிலும் கொடுமை
  சொந்த வீடு இல்லாதவனாக இருந்தால் அவனுக்கு வீடு கொடுக்க வேண்டும் அல்லது வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பான். நம்மவீட்டில் வந்து உக்கார்ந்து கொண்டு நம்மையே அதிகாரம் பண்ணுவானுங்க. மாமனார்-மாமியார் சொத்தில் உரிமை கொண்டாடுவது – அவர்கள் குடும்ப விஷயத்தில் எல்லாவற்றிலும். தலையிடுவது  தன்னுடைய சுய நலத்துக்காக மாமனார்-மாமியார் குடும்ப விஷயத்தில் எடுக்கும் முடிவுகளில் சுதந்திரத்தில் தலையிட்டு அதிகாரம் செய்வது போன்ற கொடுமைகள்.
     அதிலும் பெற்றோகள் இல்லாத மாப்பிள்ளை என்றால் இன்னும் பல கொடுமைகள்.... சித்தி வீட்டிலோ அல்லது அவனை வளர்த்தவர்கள் வீட்டிலோ அல்லது அவன் எங்கிருந்து வளர்ந்தானோ அந்த வீட்டிற்கு மருமகளா இருக்க வேண்டிய கட்டாயம். தன் மனைவிக்கு கண்ணியம் கொடுத்து தன் வீட்டுக்காரியாக – தன் இல்லத்துக்கு அரசியாக இருக்க வேண்டிய வாழ்க்கைத்துணைவியை அவனை வளர்த்த வீட்டுக்கு அடிமையாக ஆக்கிவிடுகிறான்.          
  அதிலும் வெளிநாடு செல்லும் கணவாக இருந்தால் மனைவி எங்கே இருக்க வேண்டும். என்பதில் அவன் செய்யும் தவறு ( கொடுமை) மிகப்பெறியது. ஒரு பெண்ணிற்கு எங்கே அன்பும் அரவனைப்பும் ஆதரவும் பாதுகாப்பும் அதிகமோ.  அதை விட்டு விட்டு தன் பெற்றோர்களிடம் விட்டு செல்வது. பின்பு மாமியார் மருகள் பிரச்சனை அவனுடைய வீட்டோடு இருக்கும் அக்கா தங்கையுடன் பிரச்சனை, அவனுடையஅண்ணன் தம்பியால் அவளுக்கு எற்படும் (கற்புக்கு) பிரச்சனை. இவற்றை அவளால் தாங்க முடியவில்லை என்றால் நாடு திரும்பியதும் மனைவியை தலாக் கொடுப்பது அல்லது இவற்றை தாங்க முடியாமல் இந்த புருஷனே வேண்டாம் என்ற முடிவுக்கு வரும் மனைவியின்  மிகக்கொடுமையான நிலைமை.   
 இதையெல்லாம் தன்னை ஆம்பிள்ளை என்று சொல்பவன் சிந்திக்க வேண்டும் நான் ஆம்பிள்ளை என்று பொண்டாட்டியை மிரட்டுபவன் சிந்திக்க வேண்டும்.
  பெண்ணை பெற்றவர்களிடமிருந்து கல்யாண டிரஸ் முதல் செருப்பு வரை வாங்கி போட்டுக்கிட்டு, உன்னுடைய கல்யாண செலவை அவர்களிடம் வரதட்சணையாக வாங்கிக் கொண்டு, உன் குடும்பத்தாரும் உன் உறவினரும் உன் நண்பர்களும் அவர்கள் கொடுத்த சாப்பாட்டை திண்ணுட்டு, அவர்களின் வீட்டு பொண்ணை கல்யாணம் பண்ணி அதுவும் நாகை துணிமனிகளுடன் வீட்டுக்கு தேவையான பாத்திரங்களுடன். போதாதற்கு உனக்கு பைக்கு என்று இவ்வளவையும் உனக்கு கொடுத்து உன்னை நம்பி வந்த மனைவியை நீ எப்படி நடத்துகிறாய் உன் பெற்றோர் அவளை எப்படி நடத்துகிறார்கள். என்று சிந்தித்து பார்.  
(கண்ணியத்திற்குரிய அவர்களை) உன் மனைவியை மிரட்ட அதிகாரம் பண்ண உனக்கு அருகதை இருக்கிறது. (மார்க்கத்துக்கு முரணான காரியத்தைத்தவிர)
நீ நியாயமான மனிதனாய் இருந்தால் – நரகம் என்பது அநியாயக்காரர்களுக்கு நிச்சயம் உண்டு என்று நீ நம்பினால்சிந்தித்து பார்த்து செயல்படு. 
உண்மையான ஆம்பிள்ளையாக இருப்போம் – சொந்த உழைப்பில் வாழ்வோம் – இஸ்லாத்தை பேணுவோம் உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து.  உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து உண்மையான முஸ்லிமாக மரணிப்போம். அல்லாஹ்விடம் நாம் நரகத்தை விட்டும் பாதுகாப்பு தேடுவோமாக!!!!
   முதலில் இதை பற்றி நாம் வாய் கிழிய பேசுவதற்கு முன் - நாம் வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்தோமா;அல்லது அறியாத பருவத்தில் வாங்கியிருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து அதை திரும்பவும் அந்த பெண் வீட்டாரிடையே கொடுத்து விட்டோமாநமது பிள்ளைகளுக்கு நாம் வரதட்சனை வாங்காமல் அல்லது வரதட்சனை கொடுக்காமல் திருமணம் செய்து வைத்தோமா என்பதையெல்லாம் சுய பரிசோதனை செய்ய வேண்டும். ஏனென்றால் அல்லாஹ் திருமறையில் நீங்கள் செய்யாததை ஏன் மற்றவர்களுக்கு சொல்கிறீர்கள் என கடும் கோபம் கொள்கிறான்.
 முதலில்பெண்களுக்கு அல்லாஹ் ஏன் மஹர் கொடுத்து திருமணம் செய்ய சொல்கிறான் மஹர் கொடுக்காமல் - வரதட்சனை வாங்கி திருமணம் செய்வதால் முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்படும் கடுமையான விளைவுகள் என்னென்ன என்ற அடிப்படையான விழயங்களை ஒவ்வொரு முஸ்லிமும் அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.


 


    .  

No comments:

Post a Comment