ஏகஇறைவனின் திருப்பெயரால்...
الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاء بِمَا فَضَّلَ اللّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنفَقُواْ مِنْ أَمْوَالِهِمْ فَالصَّالِحَاتُ قَانِتَاتٌ حَافِظَاتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللّهُ وَاللاَّتِي تَخَافُونَ نُشُوزَهُنَّ فَعِظُوهُنَّ وَاهْجُرُوهُنَّ فِي الْمَضَاجِعِ وَاضْرِبُوهُنَّ فَإِنْ أَطَعْنَكُمْ فَلاَ تَبْغُواْ عَلَيْهِنَّ سَبِيلاً إِنَّ اللّهَ كَانَ عَلِيًّا كَبِيرًا {34}
4:34. சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றை (கற்பை) காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்!படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும்,பெரியவனாகவும் இருக்கிறான்.66
கோபம் கொள்ளாதவன் மனிதனே அல்ல !
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கடந்த கட்டுரைகளில் கோபத்தை அடக்கி ஆளவேண்டும் என்றும் கோபம் வந்தால் பெரும் விளைவுகளை விளைவித்து விட்டே விடை பெறும் என்றும் கோபம் வரவிருப்பது ஓரளவு நமக்கு முன்கூட்டியே தெரிந்து விடும் என்பதால் மார்க்கம் கற்றுத்தந்த சில ஒழுங்குமுறைகளை முன்கூட்டியே பின் பற்றி கோபத்தை தடுத்துக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என்று எழுதி இருந்தோம்;.
சிலருக்கு கோபம் ஏற்பட்டு எதிராளியிடம் சச்சரவில் ஈடுபட்டு விட்டால் இதையே காரணமாக வைத்துக் கொண்டு அவருடன் இனிமேல் அவ்வளவு தான் எனும் வைராக்கிய நிலையை ஏற்படுத்திக் கொள்கின்றனர் இந்த வைராக்கிய நிலைக்கு உறவுக்கு பாலம் அமைத்த இஸ்லாத்தில் அனுமதி இல்லை.
மனிதன் என்ற ரீதியில் நம்மையும் மீறி சச்சரவில் ஈடுபட்டு விட்டால் சப்தத்தை அதிகப்படுத்தி விட்டால் சகட்டுமேனிக்கு ஏசி விட்டால் கோபம் தணிந்தப் பின் அவர்களிடம் சென்று வருத்தம் தெரிவித்துக் கொள்ள வேண்டும். அதற்கடுத்த சந்திப்பில் முகத்தை திருப்பிக் கொள்ளாமல் ஸலாம் கூறிக் கொள்ள வேண்டும் தொடர்ந்து சந்திக்கும் இடங்களிலெல்லாம் ஸலாம் கூறிக் கொண்டெ இருந்தால் அவருடைய அந்த வருத்தத்தை இந்த ஸலாம் குறைத்து விடும்> முறிய இருந்த உறவை இணைத்து விடும்.
மனிதர்களுக்கு மத்தியில் கோப தாபத்தால் ஏற்படக் கூடிய கசப்பான நிகழ்வுகளைக் கலைந்து பரஸ்பரம் அமைதியையையும், இனக்கத்தையும் ஏற்படுத்துவதற்காகத்தான் இந்த ஸலாம் என்ற பிரார்த்தனையை இஸ்லாம் வழங்கியது.
மனிதர்கள் அனைவருமே தவறிழைப்பவர்கள் தான் நூல் பிடித்த மாதிரி எவராலும் நடக்க முடியாது சறுக்குவதை> தவறுகள் ஏற்படுவதை தவிர்க்கவே முடியாது.
இன்று நம்முடைய எதிரில் நிற்பவருக்கு எற்பட்டது போன்று அல்லது அதைவிட பலமடங்கு நம்மை விட பலசாலி முன்பு நாளை நாம் நிற்கக் கூடிய நிலமை ஏற்படலாம் என்பதை கவனத்தில் வைத்துக் கொண்டு அவரது ஸலாமை உளப்பூர்மாக ஏற்று பதில் ஸலாம் அளித்தால் கண்டிப்பாக இருவரது உள்ளத்தில் அல்லாஹ் அமைதியை தவழச் செய்வான்> உறவை வலுப்படுத்துவான்.
கோபம் கொள்ளாதவன் மனிதனே அல்ல !
கோபம் கொள்ளாமல் மனிதனால் இயங்கவே முடியாது என்பது அடுத்த செய்தி இரத்தம் உடலில் ஓடிக் கொண்டிருக்கும் காலமெல்லாம் மனிதன் கோபப் பட்டேத் தீருவான் இரத்த ஒட்டம் முழுமையாக நின்று அனைத்து செயல்பாடுகளும் முடங்கியப் பின்னரே கோபமும் உடலிலிருந்து முற்றாக விடைபெறும் அதுவரை கோபம் உயிருள்ள உடலிலிருந்து பிரிக்கவே முடியாது.
கோப உணர்வு மனிதன் இயங்குவதற்கு இன்றியமையாதது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
கோபம் இருந்தால் தான் அநீதியை கண்டு ஆர்ப்;பரிக்க முடியும்> கோபம் இருந்தால் தான் இழந்த உரிமைகளை வென்றெடுக்க முடியும்>கோபம் இருந்தால் தான் சமுதாயத்தில் நிலவும் தீமைகளை தட்டிக் கேட்க முடியும்.
ஆனால் கோபத்தில் இரண்டு வகை உள்ளது ஒன்று கடந்த கட்டுரைகளில் எழுதியதைப்போன்ற தீய விளைவுகளை உண்டுபண்ணக் கூடிய மிதமிஞ்சிய கோபம். அந்த மாதிரியான கோபத்தை கட்டுப்படுத்தக்கூடியவர்களைத் தான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வீரன் என்ற புகழாரத்தை சூட்டினார்கள்.
மற்றொன்று நன்மைகளை குவிக்கக்கூடிய மிதமான கோபம். நன்மைகளை குவிக்கக்கூடிய கோபத்திற்கு இஸ்லாம் தடைவிதிக்க வில்லை அண்ணல் நபி(ஸல்)அவர்களே அதற்கு பல வேலைகளில் முன்மாதரியாகவும் திகழ்ந்திருக்கிறார்கள்.
நன்மைகளை குவிக்கக்கூடிய கோபத்திலிருந்து தான் அவசியத்திற்கு தேவையான வீரமும்> வேகமும்> போர் குணமும் வெளிப்படும்.
பெண்களை நிர்வகிப்பதற்கு ஆண்களே தகுதியானவர்கள் என்று அல்லாஹ் கூறுவதால் மிதமான கோபம் இருந்தால் தான் பெண்களை நிர்வகிக்க முடியும். சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும்> ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள்> பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்...4:34.
உங்கள் குடும்பத்தாரை நரக நெருப்பிலிருந்து தடுத்துக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ் கூறுவதால் மிதமான கோபம் இருந்தால் தான் குடும்ப உறுப்பினர்களை (பிள்ளைகள்> இளைய சகோதர> சகோதரிகள்) கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டு தீமைக்குள் நுழைய விடாமல் தடுத்து நரகிலிருந்து காக்க முடியும். நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! ... 66:6.
குடும்ப உறுப்பினர்களை கட்டுக்குள் வைத்துக் கொண்டு கட்டுக்கோப்பான குடும்பத்தை கட்டமைத்து இம்மை> மறுமையை வெற்றி கொள்வதற்கு மிதமான கோபம் அவசியம் தேவை ஆனால் அந்த கோபம் கடந்த கட்டுரைகளில் எழுதியதைப்போன்ற கடுமையான கோபமாக இருக்கக் கூடாது என்பதில் அதிகம் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்.
குடும்ப உறுப்பினர்களை கட்டுப்;பாட்டுக்குள் வைத்துக் கொள்வதற்காக கோபப்படுகிறேன் என்று கூறிக்கொண்டு கோபம் கட்டுப்பாட்டை இழந்து விட்டால் உள்ளதும் போனதடா ... என்ற கதையாகி விடும்.
உதாரணத்திற்கு மனைவி முரண்டு பிடித்தால் சிறிது காலத்திற்கு திருந்தும் வரை படுக்கையிலிருந்து விலக்கி வையுங்கள் அதிலும் திருந்த வில்லை என்றால் காயம் படாதவாறு லேசாக அடியுங்கள் என்று மனிதக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் கூறுவதால் கோபம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் தான் லேசாக அடிக்க முடியும் கட்டுப்பாட்டை மீறிய கோபமாக இருந்தால் அது கொலை வெறி தாக்குதாலாக மாறி விடும்.4:34...பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவனாகவும்> பெரியவனாகவும் இருக்கிறான்.66
ஆட்டை> மாட்டை அடிப்பது போல் அடிக்கும் கணவனிடம் வாழ முடியாது என்ற முடிவை மனைவி மேற்கொண்டு விட்டால் திருத்த நினைத்து அடிக்கப்போனது திசை மாறி தலாக்கில் முடிந்துவிடலாம்.
அதே போன்று எந்த நிலையிலும் முகத்தில் அடிப்பதையும் இஸ்லாம் தடுத்திருப்பதால் கோபம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் தான் கை>கால்கள்> முதுது என்று தேடிப் பார்த்து லேலான அடியாக அடிக்க முடியும் கோபம் கட்டுப்பாட்டை இழந்து விட்டால் முதல் அடி முகத்தில் தான் விழும். என்பதையும் யாரும் மறுக்கமுடியாது. எந்தச் சந்தர்ப்பத்திலும் மனைவியின் முகத்தில் அடிப்பதையும், காயம் ஏற்படும் படி அடிப்பதையும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மிக வன்மையாகத் தடுத்துள்ளார்கள். நூல்: புகாரி 1294, 1297
கோபம் கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் தான் நம் எண்ணத்தின் அடிப்படையில் நன்மைகள் குவியும். கோபம் கட்டுப்பாட்டை இழந்து விட்டால் ஷைத்தானின் ஆதிக்கத்தில் மாறி தீமைகளை விளைத்து விடும் என்பதை கடந்த கட்டுரைகளில் தீமையை விளைவிக்கும் கோபங்களை பட்டியலிட்டோம்.
இடம்> பொருள்> ஏவல்.
நன்மைகளை குவிக்கும் கோபம் மிதமானதாக இருக்க வேண்டும் என்பதுடன் கோபத்தை எப்பொழுது வெளிப்படுத்த வேண்டும்> எப்பொழுது வெளிப்படுத்தக் கூடாது. எப்பொழுது வெளிப்படுத்தினால் நன்மை விளையும். எப்பொழுது கட்டுப்படுத்தினால் தீய விளைவுகளைத் தடுக்க முடியும். என்பதிலும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.
உடலில் ஏற்படும் பிற உணர்வுகளில் சிலவற்றை கண்ட இடத்திலும் உடலைத் தூண்ட விடாமல் கட்டுப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் நமக்கு உள்ளது.
உதாரணத்திற்கு வீட்டை விட்டு ஒருவர் வெளியேறி அலுவலகப் பணியிலோ அல்லது வியாபாரத்திலோ ஈடுபட்டிருக்கும் பொழுது பாலுணர்வு உடலைத் தூண்டினால் அதை எவ்வாறு தடுத்துக் கொள்கின்றாரோ அவ்வாறே கோப உணர்வையும் இடம் பொருள் அறிந்து அல்லாஹ்வும்>அல்லாஹ்வுடைய தூதரும் காட்டித்தந்த முறையில் தடுத்துக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வும்> அல்லாஹ்வுடைய தூதரும் காட்டித்தந்த முறையில் கோபத்தை தடுத்துக் கொள்ள எண்ணினால் கண்டிப்பாக தடுத்துக்கொள்ள முடியும் எண்ணத்தின் அடிப்படையில் தான் செயல்பாடுகள் அமையும் என்பதால் நல்லவற்றிற்காக எண்ணுவதை அல்லாஹ் ஒருபோதும் நிராகரித்து விட மாட்டான் நிறைவேற்றியேத் தருவான்.
இடம் பொருள் அறிந்து கோபத்தைக் கட்டுப்படுத்த எண்ண வில்லை என்றால் கடந்த கட்டுரைகளில் எழுதியதுப் போன்ற தீய விளைவுகள் எற்படுவதை வேறெந்த வழி முறைகளாலும் தடுக்கவே முடியாது அது உலக மறுமை வாழ்வுக்கு பெருத்த நஷ்டங்களை ஏற்படுத்தி விடும்.
எழுதியபடி நானும்> வாசித்தப் படி உங்களையும் அமல் செய்யும் நன்மக்களாக வல்ல அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக !
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104
No comments:
Post a Comment