ஏகஇறைவனின் திருப்பெரால்...
وَعِبَادُ الرَّحْمَنِ الَّذِينَ يَمْشُونَ عَلَى الْأَرْضِ هَوْنًا وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا {63}
25:63. அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். தம்முடன் அறிவீனர்கள் உரையாடும் போது ஸலாம் கூறி விடுவார்கள்.159
விட்டுக் கொடுப்பதே சிறந்தது
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
கடந்தக் கட்டுரையில் கோபம் வருவது எதிரில் நடக்கும் சம்பவங்கள் மூலமாகவும்,உடல் நிலையில் ஏற்படும் மாற்றங்கள் மூலமாகவும் முன்கூட்டியே ஓரளவு தெரிந்து கொள்ள முடியும் என்பதால் அதை எதிர்கொள்ளத் தயாராகும் முன்பே 'அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம்' 'ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்'' எனும் பிரார்த்தனையை சொல்லி விட வேண்டும் என்பதைப் பார்த்தோம்.
'அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம்' 'ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்'' எனும் பிரார்த்தனையை நாம் சொல்லிவிட்டால் அல்லாஹ்வுடைய பாதுகாப்பு நமக்கு கிடைத்து விடும் அதனால் ஷைத்தான் நம்மிடமிருந்து விலகி விடுவான்.
ஆனால் எதிராளி 'அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம்' 'ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்'' எனும் பிரார்த்தனையை சொல்ல வில்லை என்றால் நம்மிடமிருந்து விலகிய ஷைத்தான் அவரை துவம்சம் செய்து அவரை இரு மடங்கு அல்லது பலமடங்கு வேகம் கொள்ள வைத்து நம்மீது அடர்ந்தேற வைப்பான்.
• நீங்கள் 'அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம்' என்று சொல்லி விட்டால் என்னிடம் வருவான்.
• நான் 'அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம்' என்று சொல்லி விட்டால் உங்களிடம் வருவான்.
அதனால் ஷைத்தானை விரட்டும் இந்த விஷயத்தில் ஒரு மடங்கல்லாது பல மடங்கு பொறுமையை கையாள்வதுடன் அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெற்ற நாம் அதைத் தொடர்ந்து சில செயல்களையும் கூடவே செய்ய வேண்டும்.
மன்னிக்கும் மான்பு.
'அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர்ரஜீம்' எனும் பிரார்த்தனையை செய்து அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெற்றதும் அதற்கடுத்ததாக எதிராளியை மன்னித்து விடுவோம் என்ற நற்சிந்தனை உள்ளத்தில் உதயமாகி விட வேண்டும். இதை செய்யச் சொல்லி அல்லாஹ்வே திருமறையில் நமக்கு உத்தரவிடுகிறான்.
3:134. அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல் வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
என் மீது தவறில்லை என்பதில் இருவரும் உறுதியாக நிற்பதுவே இருதரப்பிலும் கோபம் குறையாமல் வளர்ந்து சென்று பாரிய விளைவுகளை உண்டுப் பண்ணி விடுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. அதனால் தான் இருவரில் ஒருவர் மற்றவரை மன்னித்து விடும்படி இறைவன் கூறுகிறான்.
இருவரில் ஒருவர் விட்டுக்கொடுத்து விட்டால் பிரச்சனைத் தீர்ந்து விடும். எதிராளியை மன்னிப்பதன் மூலமாகவே கோபத்தை மென்று விழுங்க முடியும் என்பதை அறிந்த அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எதிராளியை மன்னித்து விடுங்கள் என்ற உத்தரவைப் பிறப்பிக்கிறான்.
அமைதி தவழச் செய்யும் அழகிய இஸ்லாம் மார்க்கத்தை உலக மாந்தர் அனைவருக்கும் அருளிய அளவற்ற அருலாளனாகிய அல்லாஹ் இது போன்ற காரியங்களை செய்பவர்களை அதிகம் நேசிப்பதாகவும் வாக்களிக்கிறான்.
அல்லாஹ்வின் நேசத்திற்குரியவர்களாக ஆக வேண்டும் என்று நினைப்பவர்கள் சப்பை மேட்டரை தூக்கி குப்பையில் வீசி விட முன் வர வேண்டும்.
1. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கற்றுத்தந்த இறைவனிடம் பாதுகாப்புக்கோரும் வாசகம்,
2. இறைவனின் கட்டளையாகிய மன்னிக்கும் உயர் குணம்.
மேற்காணும் இரண்டு நற்செயல்களே மனிதர்களுக்கு மத்தியில் ஏற்படும் சிறியப் பிரச்சனைகளை காட்டுத்தீப் போல் கொழுந்து விட்டு எரிய வைத்து விட திட்டம் தீட்டி செயல்படும் ஷைத்தானின் தீய சூழ்ச்சி முறியடிக்கப்படும்.
மேற்காணும் நற்சிந்தனைகள் எவரிடத்தில் வந்து விடுமோ அவர்களை அல்லாஹ் ஒருப் போதும் கை விட மாட்டான் திட்டுபவர்களை திட்டிக் கொண்டே இருக்கவும் விட மாட்டான்.
இறைச் சட்டத்தை மதித்து அவர் அமைதி காத்துவிட்டால் அவருக்கு பதிலாக வானவர்களை பதில் கூற வைப்பான் வல்லோன் இறைவன்.
வரலாற்றில் ஓர் நாள்
அபூபக்கர்(ரலி) அவர்களும், இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அமர்ந்திருக்கையில் ஒருவர் அபூபக்கர்(ரலி) அவர்களைத் திட்டுகின்றார், மீண்டும் திட்டுகின்றார், மூன்றாவது முறையும் திட்டியதும் பதில் சொல்ல அபூபக்கர்(ரலி) எழுகிறார்கள் உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அங்கிருந்து வெளியாகும் நோக்கில் எழுந்து விடுகின்றார்கள். இதைப் பார்த்து இறைத்தூதர் அவர்களே என்மீது எந்த தவறும் இல்லை என்பதை தாங்கள் அறிவீர்கள் அவ்வாறிருக்க என் மீது கோபத்துடன் எழுந்து விட்டீர்களே என்று கேட்க ? நீங்கள் பொறுமையுடன் இருந்தததைப் பார்த்து அல்லாஹ் அவர் மீது மலக்குகளை சாபமிட அனுப்பினான் மலக்குகள் வரும் வேளையில் நீங்கள் பதிலளிக்க எழுந்து விட்டீர்கள் வந்த மலக்குகள் திரும்பி விட்டனர் மலக்குகள் போய் ஷைத்தான் அமர்ந்த இடத்தில் எனக்கு என்ன வேலை இருக்கிறது ?
நடப்பவைகளை இறைவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற நன்னம்பிக்கையில் இயன்ற வரை அவருக்கு பதிலளிக்காமல் இருக்கவே முயற்சிக்க வேண்டும்.
அமைதி நிலவச் செய்யும் ஸலாம்.
ஒரு மனிதனால் எவ்வளவு தான் சகிக்க முடியும் என்ற சிந்தனை வரலாம் ?
அவ்வாறான சிந்தனை வரவே செய்யும் அது இயல்பு தான் !
அதனால் தான் அல்லாஹ் அதை ( கசந்தாலும் பரவா இல்லை) மென்று விழுங்கி விடுங்கள் என்றுக் கூறுகிறான்.
அதையும் மீறி சகிக்க முடியாத நிலை வரும் பொழுது மேற்காணும் இரண்டு நிலைகளுடன் மூன்றாவதாக ஸலாம் எனும் அமைதியை அவர் மீது தவழச் செய்யச் சொல்கிறான்.
நீங்கள் கூறுகின்ற ஸலாம் அவரது வேகத்தை தணித்து அவர் மீது அமைதி நிலவச் செய்தால் அவரும் கண்டிப்பாக கட்டுப்பாட்டுக்கள் வந்து விடுவார்.
25:63. அளவற்ற அருளாளனின் அடியார்கள் பூமியில் பணிவாக நடப்பார்கள். தம்முடன் அறிவீனர்கள் உரையாடும் போது ஸலாம் கூறி விடுவார்கள்.159
மேற்காணும்
1. இறைத்தூதர்(ஸல்)அவர்கள் கற்றுத்தந்த இறைவனிடம் பாதுகாப்புக்கோரும் வாசகம்,
2. இறைவனின் கட்டளையாகிய மன்னிக்கும் உயர் பண்பு.
3. அமைதி தவழச் செய்யும் ஸலாம் கூறுதல்
போன்ற மூன்று இறைச் சட்டங்கள் எவ்வளவு பெரிய கோபத்தையும் ஷைத்தானின் சூழ்ச்சியையும் மண்ணை கவ்வச் செய்து விடும்.
குறிப்பு:
அவரை மன்னித்து விடலாம் என்று எண்ணுவதை மனதளவில் வைத்துக்கொள்ள வேண்டும் வாயால் மொழியக் கூடாது.
No comments:
Post a Comment